1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 18 மே 2024 (13:39 IST)

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Seeman
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர், 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் நடக்கவில்லை என்றும்  விடுதலை புலிகள் அமைப்பு மீது ஏன் தடை விதிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர்.
 
தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும் என்றும் நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்று பயம் தான் என்றும் விடுதலை புலிகள் என்ற பெயருக்கே பயமா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
 
கடந்த 10 ஆண்டுகளில் இதை சாதித்துள்ளோம் எனக் கூறி பாஜகவால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை என விமர்சித்த அவர், பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பாஜகவுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பினார்.

 
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு  மாநாட்டில் பங்கேற்பேன் என சீமான் பதில் அளித்தார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணியா என கேட்டதற்கு, வெயிட்டிங் என ஒரு வரியில் சீமான் தெரிவித்துள்ளார்.