தெரியாத கேள்விகளை நிரப்பாமல் விட்டுவிட வேண்டும்? நீட் தேர்வில் நடந்த முறைகேடு..!
தெரியாத கேள்விகளை நிரப்பாமல் விட்டுவிட்டால் நானும் எனது கூட்டாளிகளும் சேர்ந்து அந்த கேள்விகளுக்கு சரியான பதிலை நிரப்பி அதிக மதிப்பெண்கள் பெற வைத்து விடுவோம் என்று கூறி நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நீட் தேர்வு நடந்த நிலையில் இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ள செய்தி வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் கோத்ராவில் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வருவதாக கூறி 16 மாணவர்களிடம் ஆசிரியர் ஒருவர் பணம் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
நீட் தேர்வு மைய கண்காணிப்பாளரான இவர் பணம் கொடுத்த மாணவர்கள் தங்களுக்கு தெரியாத கேள்விகளை நிரப்பாமல் விட்டுவிட வேண்டும் என்றும் அதற்கான பதிலை தானும் மையத்தில் பணியாற்றும் மேலும் இருவரும் சேர்ந்து நிரப்பி தருவதாகவும் கூறியுள்ளார். மொத்தம் 16 பேர்களிடம் அவர் இந்த டீல் பேசி பணம் வாங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran