ஆக்‌ஷனில் இறங்கிய டிடிவி: கூடிய விரையில் வெளிவரும் சசிகலா!

Last Modified வியாழன், 18 ஜூலை 2019 (09:01 IST)
சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் வேலூர் தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு தினகரன் அளித்த பதில் பின்வருமாறு, 
 
கட்சியை பதிவு செய்துக்கொண்டிருக்கிறோம். இதற்கான நடைமுறைகள் முடிந்த பின்னர் தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார். இதனோடு, சொந்த காரணத்திற்காக சுயநலத்தோடு சென்றவர்களை எங்களால் தடுக்க முடியாது. 
உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் எங்களுடன் இருப்பார்கள். சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அவர் நிச்சயம் விரைவில் வெளியே வருவார். 
 
அதேபோல் கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் மீது கட்சி சார்பில் நடவடிக்கை எடுப்பது தொடர்ந்து வருகிறது. அது இனியும் தொடரும் என தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :