வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 13 நவம்பர் 2018 (12:26 IST)

மோடியுடன் கூட்டணி? ரஜினிகாந்த் சூசக பதில்

நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் 90 சதவீத வேலைகள் முடிந்ததாகவும் விரையில் கட்சியின் பெயரை வெளியிடுவேன் எனவும் தெரிவித்திருந்தார். 
 
ஆனால், அவரது அடுத்தடுத்த சினிமா படங்கள் அறிவிப்பு வருகிறதே தவிர அரசியல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வந்த பாடில்லை. நானும் அரசியலுக்கு வருவேன் என்ற போக்கில் அவ்வப்போது தேவையான சமயங்களில் மட்டும் சில கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்னெடுத்து வைக்கிறார். 
 
அந்த வகையில் நேற்று அவர் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, ராஜிவ் கொலை வழக்கு குறித்து கேட்ட போது அவர் சரியான பதிலை கொடுக்காததற்கு இன்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், அந்த ஏழு பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 
அதோடு, பாஜக குறித்து கேட்ட போது ஒருவரை எதிர்த்து பத்து பேர் கிளம்புகிறார்கள் என்றால் யார் பலசாலி என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள் என பதிலளித்தார். அப்போது நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பீற்களா, நீங்கள் பாஜகவை ஆதரிக்கிறீர்களா என கேட்ட போது கூட்டணியை பற்றி பிறகு பேசலாம், ஆதரவு என்பது மக்களின் முடிவில் உள்ளது என கூறியுள்ளார். 
 
ஏற்கனவே நேற்று, பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, பாஜக அந்த அளவுக்கு ஒரு ஆபத்தான கட்சியா? என கேட்டதற்கு, அப்படிதான் என்று இவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள், அப்படியானால் கட்டாயம் அப்படித்தானே இருக்க முடியும்? என பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.