ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 நவம்பர் 2018 (12:04 IST)

100 சதவீதம் இலவசம் தேவை: சர்கார் குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

மக்களுக்கு இலவசங்கள் வழங்குவது தவறில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 
விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவசங்களை எரிப்பது போன்றும் சில வசனங்கள் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையிலும் இருந்ததால் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
 
இதனையடுத்து படத்தில் இருந்த சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டு படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், சர்கார் படத்தில் கூறுவது போல மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது தவறா என கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த அவர் அந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் 100 சதவீதம் மக்களுக்கு இலவசங்கள் தேவை. ஆனால் ஓட்டினை மனதில் வைத்து இலவசங்கள் கொடுப்பது தான் தவறு என கூறினார்.