வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (15:00 IST)

சிறந்த நடிகை சசிகலா புஷ்பா; ஜெ.வை சந்திக்காமலே அடித்ததாக நாடகம்: அதிர்ச்சி தகவல்!

தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலேயே பெரும் அதிர்வலைகளை நேற்று ஏற்படுத்தினார் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. மாநிலங்களவையின் மையத்தில் நின்று முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார் சசிகலா புஷ்பா.


 
 
இந்திய அரசியலில் ஒரு சக்திவாய்ந்த பிரபலமான அரசியல்வாதியாக இருப்பவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரை எதிர்த்து, அவர் தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்துகிறார், அடித்தார், மாநில அரசால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது, ஆகையால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சசிகலா புஷ்பா கதறியது ஜெயலலிதாவையே அதிர வைத்திருக்கும்.
 
மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனவும், ஜெயலலிதா அவரை அடிக்கவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதா அடித்ததாக கூறி அதன் மூலம் அனுதாபம் பெற்று பதவியை காப்பாற்றவும், எதிர்கட்சிகளுக்கு தூபம் போட்டு கட்சி தாவவும் அவர் அரங்கேற்றிய உச்சக்கட்ட நாடகம்தான் அது என கூறுகின்றனர் அதிமுக வட்டாரத்தில்.
 
இதன் பின்னணியை அலசிய போது சில தகவல்கள் வருகின்றன. சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை அடித்தது சனிக்கிழமை. அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை. பொதுவாக ஞாயிற்றுகிழமை ஜெயலலிதா யாரையும் சந்திப்பது இல்லை. தவிர்க்க முடியாத சந்திப்பு என்றாலும், விரும்பினால் மட்டுமே சந்திப்பு நடக்கும். இது அரசியல் வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.
 
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அழைக்கப்பட்ட சசிகலா புஷ்பாவை ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை. மாறாக நடந்ததே வேறு. திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் அறிந்து கடும் கோபமடைந்த ஜெயலலிதா தம்பிதுரையை அழைத்து, என்ன நடக்குது? எனக் கேட்டு கடிந்து கொண்டார்.
 
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்ட சசிகலா புஷ்பா, உள்ளே வந்ததும், அவரிடம் பூங்குன்றன், மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க. ராஜினாமா கடிதம் கொடுத்துட்டுப் போங்க என கூறியிருக்கிறார்.
 
ஆனால் சசிகலா புஷ்பா ராஜினாமா கடிதம் கொடுக்க மறுத்துள்ளார், இதனால் கடுப்பான தம்பிதுரை சசிகலாவிடம் கோபமாக பேசி வெற்றுத் தாளைக் கொடுத்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கியதாக தகவல்கள் வருகின்றன.
 
ஆனால் சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா சந்திக்கவே இல்லை என தகவல்கள் வருகின்றன. ஜெயலலிதாவை சந்திக்காமலே அவர் தன்னை அடித்ததாக சசிகலா புஷ்பா நாடகமாடியதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.