புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:26 IST)

எடப்பாடியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – ஈபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன ?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட விழாவில் எடப்பாடியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமெனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழக அரசு சமீபகாலமாக நிர்வாக சிக்கல்களைப் போக்கும் விதமாக மாவட்டங்களைப் பிரித்து புது மாவட்டங்களை அறிவித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி புது மாவட்டமாகவும், அதன்பின் காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு தனி மாவட்டமாகவும், நெல்லையிலிருந்து தென்காசி தனி மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடியைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது. முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா எல்.தஹில் ரமணி நேற்று திறந்து வைத்தார். அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி எடப்பாடி பார் அசோசியேஷன் தலைவர் ஆனந்தன் ‘முதல்வர் இப்போது பல மாவட்டங்களைப் பிரித்து வருகிறார். அந்த வகையில் சேலத்திலிருந்து தனி மாவட்டமாகப் பிரிக்க எல்லா தகுதிகளும் எடப்பாடிக்கு இருக்கின்றன. அந்த அறிவிப்பை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்’ எனக் கோரிக்கை வைத்தார்.

இதைக் கேட்டு சிரித்த முதல்வர் அவர் பேசும் போது இது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.