1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (15:13 IST)

கலைஞர் இருந்த போது ஸ்டாலின் செய்த வேலை!! போட்டுக்கொடுத்த பிரேமலதா!!

கலைஞர்  இருந்த போது ஸ்டாலின் செய்த வேலை!! போட்டுக்கொடுத்த பிரேமலதா!!
கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்க்க நேரம் கேட்டும் ஸ்டாலின் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். 
 
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் மரணமடைந்தார். அவரின் மரணம் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு இந்தியாவெங்கிலும் இருந்து தமிழகம் வந்த தலைவர்கள் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
 
அந்த நேரத்தில் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்த விஜயகாந்த், கலைஞரின் மறைவைத் தாங்காமல் கண்ணீர் விட்டபடி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதேபோல் சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
கலைஞர்  இருந்த போது ஸ்டாலின் செய்த வேலை!! போட்டுக்கொடுத்த பிரேமலதா!!
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்க்க நேரம் கேட்டு பலமுறை ஸ்டாலினை அணுகினோம். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். ஆனால் இப்பொழுது கேப்டனை பார்க்க வருகிறேன் என கூறியபோது ஒரு வார்த்தை கூட பேசாமல் அவரை வரச்சொன்னோம். இதுதான் அவருக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் என அவர் கூறினார்.