திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2018 (10:15 IST)

அரவிந்தர் ஆசிரமத்திற்கு மோடி வந்தால் தற்கொலை செய்து கொள்வேன்: இளம்பெண் மிரட்டல்

இன்று ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மானியவிலை ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, நாளை புதுவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவற்றில் ஒன்று பிரதமர், புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு செல்வது.

இந்த நிலையில் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹேமலதா என்ற இளம்பெண், பிரதமர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு வருகை தந்தால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

ஹேமலதாவுடன் அவரது நான்கு சகோதரிகளும் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆசிரமத்தில் உள்ள நிர்வாகிகள் பாலியல் தொல்லை தருவதாக கூறி குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஹேமலதாவின் இரண்டு சகோதரிகளும், தாயாரும் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் மீண்டும் தற்கொலை மிரட்டலை ஹேமலதா விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.