1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (21:11 IST)

அமேசான் போன்று கொடைக்கானலில் காட்டுத் தீ ...

அமேசான் போன்று கொடைக்கானலில் காட்டுத் தீ ...

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அருகேயுள்ள வனப்பகுதியில் காட்டு தீ பரவி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த வருடம் அமேசான் வனத்திலும், ஆஸ்திரேலியா வனத்திலும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில், கோடிக்கணக்கான மரங்கள் செடி கொடிகள்  எரிந்து நாசம் ஆனது.
 
இந்நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தளமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அறியப்படுகிற கொடைக்கானல் அருகேயுள்ள கோவில்பட்டி என்ற வனப்பகுதியில் காட்டுத் தீ பரவி வருகிறது.இக்காட்டுத் தீ தனியார் நிலத்தில் இருந்து அருகில் இருக்கும்  தோட்டங்களுக்கு பரவியுள்ளது. 
 
மேலும், இங்கு அரிதான மூலிகைகள், காட்டுத் தீயில் கருகிவருவதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.