ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:31 IST)

துரத்திய காட்டுயானை....கூலாக வாகனத்தை ஓட்டிய டிரைவர்...உயிர் தப்பிய பயணிகள்

elephant
தமிழகத்தின் கூடுதல் தலைமை சுற்றுச்சூழலியல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ இன்று தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள வனங்கள் எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு, வனத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று, உள்ளே சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டிகளுடன் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று ஒரு வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது, அங்கிருந்த ஒரு காட்டுயானை இந்த வாகத்தைத் துரத்தியது. இதில், ஓட்டுனர் எந்த வித பதற்றமும் இல்லாமல், வாகனத்தை பின்னால் இயக்கினார். நீண்ட தூரம் வந்தபின், யானை வாகனத்தைத் துரத்துவதை விட்டுவிட்டு சென்றது.

ஆனால், சாமர்த்தியாகச் செயல்பட்டு, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் காப்பாற்றிய  ஓட்டுனரை சுப்ரியா சாஹூ பாராட்டி, தன் டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.