ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (14:21 IST)

ஒரு பைக்கில் 7 பேர்...ஐஏஎஸ் அதிகாரி வெளியிட்ட வீடியோ வைரல்

byke
தமிழக சுற்றுச்சூழலியல்  மற்றும் வனவியல் கூடுதல்  தலைமைச் செயலாளர் மற்றும் முன்னாள்  தூர்தர்ஷன் அதிகாரியுமான சுப்ரியா சாஹு ஐஏஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ஒரு பைக்கில் ஒரு ஆண் குழந்தைகள் 4 பேர், இரு பெண்கள் என மொத்தம் 7 பேர் செல்லும் வீடியோ காட்சியை வெளியிட்டு,. இதைப் பற்றி பேச வார்த்தையில்லை என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு ஆட்டோ அல்லது காரில் செல்ல வேண்டியவர்கள் ஆபத்தான முறையில் இப்படி செல்வது பற்றிய விழிப்புணர்வாக அவர் இதைப் பதிவிட்டுள்ளார். இதற்குப் பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ 1 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் மட்டும்  1.73 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.