வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:25 IST)

ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்: ஆத்தூர் அருகே பரபரப்பு!

tablet
ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகள் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று அரசு அதிகாரிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினர். இந்த மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிகள் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் 
 
மருத்துவமனையில் 50 மாணவிகளுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊட்டச் சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு தகவல் அந்த பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது