திங்கள், 19 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஜனவரி 2026 (16:15 IST)

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!
வாக்காளர் பட்டியலில் இந்தியக்குடிமக்கள் மட்டுமே இடம்பெறுவதை உறுதி செய்ய தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போது ஆணையம் இந்த வாதத்தை முன்வைத்தது.
 
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்காளர் பட்டியலின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதும், தகுதியற்றவர்களை நீக்குவதும் ஆணையத்தின் சட்டப்பூர்வமான உரிமை என்று குறிப்பிட்டார். 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் மட்டுமே பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டவர்கள் அல்லது ஊடுருவியவர்கள் ஒருபோதும் இதில் இடம்பெற முடியாது என்றும் அவர் வாதிட்டார். 
 
பட்டியலில் தவறுதலாக சில வெளிநாட்டவர்கள் இருந்தாலும் அல்லது ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும், அவர்களை கண்டறிந்து நீக்க வேண்டியது ஆணையத்தின் கடமை என தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புகள் குறித்த விவாதம் நீதிமன்றத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Edited by Mahendran