புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (07:24 IST)

தாலிகட்டிய கணவரை விட்டுவிட்டு டிக்டாக் தோழியுடன் ஓடிப்போன மனைவி!

சிங்கப்பூரில் பணி புரிந்து வரும் ஒருவர் தனது ஆசை மனைவிக்காக ஆயிரக்கணக்கில் பணம் அனுப்ப, அந்த பணத்தை தனது நெருங்கிய தோழியுடன் ஊதாரித்தனமாக செலவு செய்த பெண் ஒருவர் திடீரென தலைமறைவாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

 
சிங்கப்பூரில் பணி புரியும் ஆரோக்கியம் என்பவருக்கும் வினிதா என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரு சில நாட்களில் ஆரோக்கியம் சிங்கப்பூருக்கு பணிநிமித்தம் சென்று விட்டார். இரவுபகலாக பணிபுரிந்து அவர் ஆயிரக்கணக்கில் அனுப்பிய பணத்தை வைத்து வினிதா ஊதாறித்தனமாக செலவு செய்து வந்தார். 
 
 
இந்த நிலையில் அபி என்பவர் டிக்டாக் மூலம் வினிதாவுக்கு தோழியானார். இருவரும் டிக்டாக் வீடியோ மூலமும் நேரிலும் தங்கள் நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்தி கொண்டனர். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்த ஆரோக்கியம், வினிதாவிடம் மாற்றம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது செல்போனை எடுத்து பார்க்கும் போது அதில் அபியும் அவரும் நெருக்கமாக இருந்த டிக்டாக் வீடியோ இருந்தது தெரியவந்தது 

 
இதனையடுத்து வினிதாவின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஆரோக்கியம் அவர்களிடம் வினிதாவுக்கு அறிவுரை கூறுமாறு கூறியுள்ளார். வினிதாவின் பெற்றோர்களும் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் திடீரென பெற்றோர் வீட்டில் இருந்த வினிதாவின் சகோதரிக்கு சொந்தமான 25 பவுன் நகையை எடுத்துக்கொண்டு அபியுடன் அவர் தலைமறைவாகி விட்டார். ஏற்கனவே ஆரோக்கியம் அனுப்பிய பணம் முழுவதையும் தன்னுடைய நகைகளை விற்றும் அவர் செலவு செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் வீடியோவினால் ஏற்பட்ட நட்பு ஒரு அழகான குடும்பத்தையே சிதைத்துவிட்டது