புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2019 (18:06 IST)

சாலை நடுவே பிரியாணி விருந்து : தலைக்கேறிய மப்பில் குடிமகன்கள் அராஜகம் !

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மது குடித்துவிட்டு சிலர் சாலைநடுவே அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரிய குளத்தில், தேனி - நெடுஞ்சாலையில் நடுவே சில மது போதையில் பிரியாணிப் பொட்டலத்தை விரித்து வைத்து, சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 
'குடி'மகன்கள் பிரியாணி சாப்பிட்டு முடிக்க, சுமார் 30 நிமிடங்கள் ஆனதால், வாகனம்  செல்ல முடியாமல் வாகன ஒட்டிகள் தவித்தனர். 
 
இந்த வீடியோ சமுக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. மது அருந்திவிட்டு சாலையை நடுவே அமர்ந்து சாப்பிட்ட இந்தக் குடிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.