செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (19:30 IST)

முதுகில் தட்டிய மோடி!: எஸ்கேப் ஆன சிறுவன் – வைரல் வீடியோ

அமெரிக்காவில் நடைபெற்ற “ஹவுடு மோடி” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறுவன் ஒருவனை முதுகில் தட்ட முயற்சிப்பதும், அந்த சிறுவன் நழுவி விடுவதுமான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் அவர். அதன்படி அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவருக்காக நடத்திய “ஹவுடி மோடி” என்ற விழாவில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. அவருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அந்த விழாவில் கலந்து கொண்டார்.

அவர்களை மகிழ்விக்க இந்திய பண்பாட்டு நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை பல்ர் செய்து காட்டினர். நிகழ்ச்சி முடிந்து மோடியும், ட்ரம்ப்பும் வெளியே செல்லும்போது கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறுவன் ஒருவன் அவர்களோடு செல்பி எடுத்து கொள்ள விரும்பினான்.

மிகப்பெரும் இரண்டு தலைவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டான் அந்த சிறுவன். பொதுவாகவே பிரதமர் மோரி குழந்தைகளை கண்டால் அவர்கள் காதை திருகுவது, முதுகில் தட்டுவது என்று தானும் ஒரு குழந்தை போலவே மாறிவிடுவார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்தபோது, ட்ரூடோவின் மகன் காதை பிடித்து கொண்டு மோடி கொடுத்த போஸ் இணையத்தில் வைரல் ஆனது.

அதுபோல செல்பி எடுத்து கொண்ட சிறுவனை செல்லமாக முதுகில் தட்ட முயற்சித்தார் மோடி. அதற்குள் சிறுவன் நகர்ந்து கொண்டான். மோடியின் குழந்தைதனமான அந்த வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.