வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (18:57 IST)

ஆபாச இணையதளத்தில் தமிழக பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்

டிக் டாக் வீடியோ ஆரம்பத்தில் பொழுது போக்கு அம்சமாக இருந்தது. ஆனால் தற்போது அதே டிக்டாக் போதையாக மாறியுள்ளது. குறிப்பாக பெண்கள் பதிஉ செய்யும் சில வீடியோக்கள் விபரீதமாகிவிடும் நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன 
 
 
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பெண்கள் தங்களுடைய டிக் டோக் வீடியோக்கள் ஆபாச இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். டிக்டாக் செயலியில் கவர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை ஒருசிலர் டவுன்லோட் செய்து அதனை ஆபாச இணையதளத்தில் பதவி செய்துள்ளனர். இந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களும், அவர்களுடைய பெற்றோர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தாலும் டிக் டாக் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வீடியோக்களை நீக்குவதற்கு இன்னும் ஓரிரண்டு நாட்கள் ஆகும் என தெரிகிறது 
 
 
டிக்டாக் செயலி தங்கள் திறமையை நிரூபிக்கும் வீடியோக்களை மட்டும் பெண்கள் பதிவிடுவது நல்லது. அது எல்லை மீறும்போது தான் இதுமாதிரி பிரச்சினைகள் ஏற்படுகிறது. காமெடி என்று பெயரில் ஒருசிலர் ஆபாச ஆபாச வீடியோக்களை வெளியிடுவதால் இவ்வாறு பிரச்சினைகளில் சிக்கி கொள்கின்றனர்.
 
 
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் ஆபாச இணையதளத்தில் பதிவாகி உள்ள பல பெண்கள், குடும்ப பெண்கள் என்றும் அவர்கள் விளையாட்டுத்தனமாக பதிவு செய்த வீடியோக்கள் தற்போது விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அறிவியலை எப்பொழுதுமே ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் ஆபத்து இல்லை, அதில் எல்லை மீறும் போது தான் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்