திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:01 IST)

நிதி நிறுவன ஊழியர் கொலை: மனைவியே கள்ளக்காதலனை ஏவி கொலை செய்தது அம்பலம்!

murder
நிதி நிறுவன ஊழியர் ஒருவரின் கொலையில் மனைவியை கள்ளக்காதலனை ஏவி கொலை செய்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் வைரவசாமி மற்றும் அவருடைய மனைவி முத்துமாரி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் 
 
அப்போது திடீரென இருவரையும் வழி மறித்த மர்ம நபர்கள் வைரவசாமியை சரமாரியாக தாக்கி விட்டு முத்துமாரி அணிந்திருந்த நகையை பறித்துச் சென்றனர்.
 
நகைக்காக இந்த கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில் முத்துமாரியை போலீசார் விசாரித்ததில் அவர்தான் கணவரை கொலை செய்ய தனது கள்ளக்காதலனை ஏவி விட்டது தெரியவந்தது
 
 இதனையடுத்து போலீசார் முத்துமாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவரது கள்ளக்காதலனை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது