வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:28 IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த நீதிபதிக்கு மரண தண்டனை!

murder
எகிப்து நாட்டில் மனைவியை கொடூரமாக கொலை செய்த நீதிபதி ஒருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டது 
 
எகிப்து நாட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்த அய்மான் ஹகாக். இவர் தனது மனைவியை தனது நண்பருடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்து புதைத்து விட்டதாக தெரிகிறது
 
மேலும் தனது மனைவியை காணவில்லை என்றும் அவர் புகார் செய்துள்ளார் ஆனால் போலீஸ் விசாரணையில் நீதிபதி பல ரகசியங்களை மறைத்ததை கண்டுபிடித்தனர் 
 
இதனையடுத்து போலீஸ் விசாரணையில் நீதிபதி மற்றும் அவரது நண்பர் நீதிபதியின் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததன் பின்னர் பிணத்தை புதைத்த அம்பலத்திற்கு வந்தது 
 
இதனை காவல்துறையினர் நீதிபதி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நீதிபதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் நண்பருக்கான தண்டனை விபரம் அடுத்த மாதம் 11 ஆம் தேதி தெரிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது