செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 27 ஜூன் 2022 (17:17 IST)

அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுத்த அரசு, அதிகாரிகள் மீது எடுக்காதது ஏன்? கமல்ஹாசன்

kamal hassan
அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்
 
கடந்த ஆட்சியில் அதிமுக அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி மீது பல்வேறு முறைகேடுகள் குற்றச்சாட்டு காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுத்தது 
 
ஆனால் இந்த முறைகேட்டில் சில  ஐ.ஏ.எஸ்அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் இன்னும் அரசு எடுக்கவில்லை என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார் 
 
அதிகாரிகள் மீது வழக்கு செய்ய வேண்டும் என  ஏழு மாதங்களுக்கு முன்அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதியும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்பது பெரும் சந்தேகங்களை எழுப்பி உள்ளது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்