கட்டிலுக்குள் கட்டுக்கட்டா பணம்! – எண்ண முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்!
பீகாரில் போதை கடத்தல் தடுப்பு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
இந்தியா முழுவதும் போதை பொருள் கடத்தல் அதிகமாக உள்ள நிலையில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக மாநிலங்கள்தோறும் போதை பொருள் கடத்தல் பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆனால் போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரியே அதை வைத்து கோடிக் கணக்கில் பணம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜிதேந்திர குமார். இவரது வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஜிதேந்திர குமார் தனது கட்டிலின் கீழே பதுக்கி வைத்திருந்த பணக்கட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். அந்த பணத்தை எண்ண முடியாமல் அதிகாரிகள் திணறும் வீடியோ வைரலாகியுள்ளது. கோடிக்கணக்கில் ஜிதேந்திர குமார் லஞ்ச பணம் சேர்த்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.