வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 பிப்ரவரி 2019 (15:27 IST)

ராஜதந்திரி ஆனாரா ராகுல் ... தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் ஏன்...?

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கிறது. அதற்குள் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றி உத்தரவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இது ஒருபுறம் எல்லோருக்கும் அதிர்ச்சியையும் அதேசமயம் பெரும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பல தலைவர்கள் தமிழக காங்கிரஸில் இருந்த போதிலும் கூட அக்கட்சிக்குள் இருக்கும் கோஸ்டி பூசல்தான் இன்னும் அதன் தலைமைக்கு குடைச்சலை தந்துகொண்டிருப்பதாக பேச்சு எழுந்தது.
 
இதற்கு முந்தைய தமிழக தலைவராக திருநாவுக்கரசர் இருந்த பொழுதும் அதே கோஸ்டிமோதல் இல்லாமலில்லை. தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ் . அழகிரி இந்த கோஸ்டிகளை தவிர்த்து எல்லோரையும் அரவணைத்து தேர்தல் வெற்றியில் ,கவனம் செலுத்துவாரா என்பதில் தான் தற்போது காங்கிரஸிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னாள் தலைவர்களின் வற்புறுத்தலின் பேரிலேயே திருநாவுக்கரசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சு எழுந்தது. தற்போது புதிய தலைவரின் செயல்கள் கட்சிக்கும், வரும் தேர்தலில் முக்கிய பன்ங்கு வகிக்கும் என ராகுல் தீர்மானித்துதான் இந்த முடிவெடுத்திருப்பார் என தெரிகிறது.

மேலும் கேஎஸ் அழகிரி தலைவராக உள்ள அதே சமயம் தலைவர் போட்டியில் இருந்த வசந்த குமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் செயல் தலைவர்களாக உள்ளனர்.
புதிய தலைவர் எல்லோரையும் அரவணைந்து செல்வாரா இல்லையா எனபது இனி வரும் காலங்களில் அவரது செயல்பாடுகளின் வாயிலாக தெரிந்துவிடும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் புதிய தலைவரின் பாட்சா பலிக்குமா என்பது வரவிருக்கிற தேர்தலில் தெரிந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.