1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (12:08 IST)

ரூ. 15 லட்சம் என்னாச்சுங்க...பாஜக மீது தினகரன் குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பாஜக மத்தியில் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திருச்சியில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் செய்து வரும் தினரகரன் மேலகண்டார் கோட்டையில் பேசும் போது 10 ஆண்டுகள் மத்தியில் பங்கு வகித்த திமுக தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று  பலத்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
 
மேலும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நன்மையளிக்கும் திட்டங்கள் எதுவும் பெரிதாக இல்லை. 4 ஆண்டுகளாகா ஆட்சி செய்த பாஜக அரசு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துதான் ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் காகிதப் பூ மாலை என்று விமர்சனம் செய்துள்ளார்.