புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (08:42 IST)

ஆட்சியை கவிழ்ப்பேன் என ஸ்டாலின் அடிக்கடி சொல்வது ஏன்?

அதிமுக ஆட்சியை சொடக்கு போடும் நேரத்திற்குள் என்னால் கவிழ்க்க முடியும் என கடந்த இரண்டு வருடங்களாக கூறி வரும் திமுக தலைவர் முக ஸ்டாலினால் இன்னும் ஆட்சியை அசைக்க கூட முடியவில்லை என்பதற்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து இப்போது அலசுவோம்
 
மக்களவை தேர்தலுக்கு முன் மோடியையும் எடப்பாடி பழனிச்சாமியையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறித்தான் திமுக மக்களிடம் ஓட்டு கேட்டது. ஆனால் இரண்டுமே நிறைவேறவில்லை. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதன்மூலம் அதிமுக ஆட்சிக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முயன்ற முக ஸ்டாலின், திடீரென அந்த நிலையில் இருந்தும் மாறி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை இப்போது வலியுறுத்த மாட்டோம் என்று கூறிவிட்டார்.
 
மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்த திமுகவால் சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. எனவே தற்போதைய நிலையில் ஆட்சி மாற்றம் என்பது நடக்காத காரியம் என்பது ஸ்டாலினுக்கு நன்றாக புரிந்துவிட்டது. அதனால்தான் அவர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் இருந்து பின்வாங்கினார். இருப்பினும் வரும் உள்ளாட்சி தேர்தலை கணக்கில் கொண்டும், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றைரை வருடங்கள் இருப்பதால் அதுவரை திமுக தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்கவும், அவர் அவ்வப்போது தன்னால் அதிமுக ஆட்சியை ஒரு நொடிக்குள் கவிழ்த்துவிட முடியும் என்று கூறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
தற்போதைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், அவர் அரசியலுக்கு வராவிட்டால் எந்த கட்சியும் மெஜாரிட்டி பெறாமல் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.