புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (06:20 IST)

ப.சிதம்பரம் கைதுக்கு ஸ்டாலினை குறை சொல்லும் கராத்தே தியாகராஜன்!

ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிதம்பரம் கைதுக்கு பல்வேறு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் ஆன கராத்தே தியாகராஜன், ப.சிதம்பரம் கைதுக்கு திமுக தலைவர் முக. ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
ப.சிதம்பரம் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய கராத்தே தியாகராஜன், 'எந்தவித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் காலத்தில் காங்கிரஸை வழிநடத்தும் அளவிற்கு தகுதியானவர் ப.சிதம்பரம் என்றும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை மூடிமறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.