ப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்: இன்னும் சில நிமிடத்தில் கைதா?

Last Modified புதன், 21 ஆகஸ்ட் 2019 (21:34 IST)
கடந்த 24 மணி நேரங்களாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இருந்த இடம் குறித்து யாருக்கும் தெரியாத நிலையில் சற்றுமுன் அவர் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஐ.என்.எஸ் மீடியா வழக்கு குறித்தும் இந்த வழக்கில் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது குறித்தும் விளக்கினார்.
இந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குவிந்தனர். இதனையடுத்து ப.சிதம்பரம் இன்னும் சில நிமிடங்களில் கைது செய்யப்படுவார் என்ற தகவல் கசிந்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் ப.சிதம்பரம் வீட்டின் முன் குவிந்து அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
முன்னதாக டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லம் அதிகாரிகளின் வருகையை அறிந்து திறக்கப்படவில்லை என்றும் இதனால் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்ததாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு, தனது வீட்டிற்கு ப.சிதம்பரம் திரும்பிய நிலையில் சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளதால் அவரை இன்னும் சில நிமிடங்களில் அதிகாரிகள் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :