ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (15:53 IST)

MKS சொல்கிறார் EPS செய்கிறார்: ரஜினி டயலாக்கில் தெறிக்கவிடும் உபி-க்கள்!

MKS சொல்கிறார் EPS செய்கிறார்: ரஜினி டயலாக்கில் தெறிக்கவிடும் உபி-க்கள்!
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #MKSசொல்கிறார்EPSசெய்கிறார் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி முதல் நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாகவும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 
முன்னதாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வந்த திமுக மற்று கூட்டணி கட்சிகள் நாளை கருப்பு கொடி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
 
அதை தொடர்ந்து திமுகவின் அழுத்தத்தினாலேயே அரசு தேர்வை ரத்து செய்ததாக சமூக வலைதளங்களில் திமுகவினர் #MKSசொல்கிறார்EPS செய்கிறார் என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.