1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : வியாழன், 16 ஜனவரி 2020 (12:07 IST)

பொங்கல் பண்டிகை ஏன் எப்படி ... ஜல்லிக்கட்டு என்றால் என்ன ?

வாழ்வின் முறைகளை உறவுகளால் மாற்றியமைக்கக் கூடிய நாள் இது. இன்று நாள் மாட்டுப் பொங்கல். நேற்று தைப் பொங்கல் முதல்நாளை முன்னிட்டு அறுவடை செய்த நம் வீரத் தமிழர்கள் இன்று உழவுக்கு உதவி செய்த மாட்டுக்கு நன்றி செலுத்தவும், உழவிட்டு சோற்றுக்கு வழிவகுத்த உழவர்களுக்கு தோள்கொடுக்கவும் இந்த நன்னாளை நாம் கொண்டாடுகிறோம்.
முறையாக எந்த ஒரு விழாவும் எதேச்சையாக உதித்ததல்ல. அது பாரம்பரத்தின் ஆணிவேராகவும், பண்பாட்டின் அடிநாதமாகவும் ஓங்கி ஒலிக்கிறது.  அதன் பிரதிபலிப்புதான் நாம் தைமுதல் நாளில் இருந்து கொண்டாடி வரும் பொங்கல்.
 
நீரின்றி இந்த உலகம் இல்லை என்பதுபோல் விவசாயம் இன்றி இவ்வுலகில் உயிர்களே இல்லை என்லாம். அந்த அடிப்படையில் தான் உலத்திற்கும் உயிர்களுக்கும் ஆதிக் காரணகர்த்தாவான சூரியனுக்கு நன்றி தெரிவித்து வேளாண்மையைப் பெருமைப் படுத்தும்விதமாகவும், இயற்கோடு மனிதனுக்குள்ள  தொடர்பையும் இறைவனோடும் இந்த உலகில் உள்ள சகல ஜீவ ராசிகளோடும் மனிதன் கொள்ளும் உறவின் பரீட்சையாகவும்தான் இந்த நன்னாளை நாம் பார்க்கவேண்டும்.
 
அந்தச் சூரியனுக்கு   அறுவடை எனும் ஆனந்த ஆழத்தியை நன்றிப்பெருக்குடன் ஏறெடுக்கின்றது நாம் மட்டுமல்ல கிரேக்கம், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, இந்தொனேஷியா  போன்ற பல நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறதும் என்றாலும் கூட நாம் உற்றார் உறவினர்களுடன் நட்புப் படை சூழ்ந்து மகிழ்ச்சிப் பூமுகமாக  இந்த அறுவடை நாளைக் கொண்டாடுகிறோம் என்பதே தமிழர்களின் தனிச்சிறப்பு.
 
இந்தப் பொங்களின் முக்கிய அம்சம் என்னவெனில் , அடுப்பில், புதுப்பானையில் கொதித்த நீரில்  வெல்லம், சிரிசி, முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை சகிதம்போட்டு இந்தப் பொங்கல் எப்படி பொங்கிவருகிறதோ அதேபோல் நமது வாழ்வில் மகிழ்ச்சியும் பொங்கிவரவேண்டும் எனபதற்காகத்தான் இதைக் கொண்டாடுகிறோம்.
 
ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த விதைநெல்லை ஆறுமாதத்திற்குப் பிறகு வெயிலிலும்ம் மழையிலும், உழைப்பிலும் பொருளாதாரத்திலும் உழைத்துக் களைத்துப் போன மறத்தமிழன் களிப்பெய்திடவேண்டி தை மாதம் முதல் நாளின்போதுஅறுவடை செய்த  அரிசியை இந்தப் புதுப்பானையில் போட்டு உலையில் வைத்துப் பொங்கவைப்பார்க்கள்.
 
அதன்பின், ஒரு தலைவாழை இலை விரித்துப் பழங்களை நிரப்பி, அதன் மீது ஊதுபத்தி கற்பூரம் கொளுத்தி,  குத்திய புதுப்பச்சரிசியில் ஆக்கிய பொங்கலைப் பரப்பிவைத்து; அந்தப் பானையைச் சுற்றி மன்மதனின் வில்லாகிய கரும்பை சுற்றிலும் வைத்து, அந்தச் சூரியனுக்கும் கடவுளுக்கும் படையளிட்டுத் தங்களின் நன்றிப்பெருக்கைத் ஜீவார்த்தமாகத் தெரிப்பதுதான் தமிழர்களின் தொன்றுதொட்ட வழக்கம்; அதை நம் அக்கம் பக்கத்து வீட்டார் உற்றார் உறவினர்களுக்கு உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியுடம் ஆத்மார்த்தமாகக் பகிர்ந்து கொள்வார்கள். அந்த வழக்கம் தான் நமது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிப்  பழக்கமாகிப் தமிழர்களின் ரத்தத்திலும் கலந்துவிட்டது என்பதுதான்  நம் தமிழணங்கின் மகத்துவம்.
 
பொங்கள் நாளின் உள்ள ஒரு முக்கிய வழக்கம், ஜல்லிக்கட்டு; பிரான்ஸ் நாட்டில் உள்ள காளை விரட்டுவதுபோன்றதல்ல நமது ஜல்லிக்கட்டு. இது பாரம்பரியத்தின் தனித்தன்மை கோலோச்சும் ஆதிக்கால நாகரிக விளையாட்டு என்பதை இதைப் பார்க்கப்பவர்களும் விளையாடுவர்களுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.
 
இந்த மாடு பிடிப்பில் மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள ஜல்லி என்ற காசை எந்த வீரன் எடுக்கிறானோ அவனுக்குத்தான் அந்த ஜல்லிக்காசு பரிசாகத் தரப்படும். மாட்டின் கழுத்தின் கட்டித் தொங்கவிடப்பட்ட ஜல்லியின் பேரில்தான் ஜல்லிக் கட்டு என்ற சொற்பதம் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
 
இந்த ஜல்லிக்கடுக்கு 2017 ஆம் ஆண்டு பெரும் தடை ஏற்பட்டது.  அப்போது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் ஒன்றிணைந்துவந்து இந்த தடைக்கு எதிராக சென்னை மெரினா கடற்கரையில் ஒரு பெரும் தன்னெழுச்சிப் புரட்சி செய்து வரலாற்றின் பக்கத்தில் கல் தோன்றி மண் தோன்றா  முன்னே தோன்றிய புகழுடையதான தமிழ் மொழிச் சொத்தைக் கொண்டவர்களாகிய  தமிழினத்தின்  புகழைச் வெற்றிச் சுவடாகப் பதித்தனர்.
 
சாப்பிடாமல் கொள்ளாமல் இனமான தமிழர்கள் இணைந்த அந்த தினத்தை நாம் மறக்கமுடியாது; எனேன்றால் கொண்ட கொள்கையில் சாதிக்காமல் முன்வைத்த காலை பின் வைக்க முடியாது என்ற பிடிவாதத்தினால் அன்றைய பீட்டா தொடர்ந்த ஜல்லிக்கட்டுத் தடையை தகர்த்து வெற்றிப் பரிசைப் பெற்றனர்.
 
அப்போது ஜல்லிக்கட்டு விளையாட அனுமதியும் கிடைத்தது.
 
இந்த ஜல்லிக்கட்டில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்பிகிறேன். 
 
பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் காளைகளுக்குத் தொல்லை ஏற்படுகிறதாகவும் சித்ரவதை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தற்கு ஒரு சிறிய உதாரணத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
 
ஏனென்றால் இதுவும் ஒரு வரலாற்றிப் பதிவு என்பதால் என்னால் எழுதாமால் இருக்கமுடியவில்லை.
 
பல ஆண்டுகளாகப் பாசத்துடன் பிள்ளையைப் போன்று போஷாக்கு ஊட்டி பார்த்துப் பார்த்துப் வளர்க்கப்படும் காளையை மற்றவர்கள் தொல்லை செய்வார்கள் என்பதற்காகவா இந்தக் காளையைப் போட்டியிப் அவிழ்த்துவிடுவார்கள் ? என்பதை யோசிக்க வேண்டும்.
 
கடவுளின் ஸ்தானத்தில் வளர்க்கப்படும் காளையை ஜல்லிக்கட்டிப் போட்டிற்கேற்ப முறையான தீவனத்தால் அளிக்கப்பட்டு, நீத்தல் பயிற்சி ;ஓட்டம்; முட்டவும் எதிர்த்து நிற்கவும் அதன் உரிமையாளர்களால் நல்ல பயிற்சி   அளிக்கப்பட்ட பிறகுதான் அந்தக் காளைகளை ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
அதேபோன்று காளைகளை   அடக்குகின்ற காளையர்களும் தீரமான உடற்பயிற்சி செய்து; பல தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு; முறைப்படி கடவுள்ளுக்கு உபவாசம் விரதம் இருந்த பிறகுதான் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மீசையை முறுக்கிக் கொண்டு  செல்லிறார்கள்.
 
அதில் முக்கியமாக காளைகளை அடைத்து வைக்கப்பட்டுள்ள கொட்டிலில் காளைகள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு குழப்பம் ஏற்படாமல் இருக்கவே ஓவ்வொரு காளைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கும்; அதன்பின், வாடிவாசலில் காளைகள் வெளிவரும் வாசலில்  உள்ளா ஒரு பனைமரங்கள் எனும் பத்து அடி அணைப்பு மரத்தில்  அருகில் அசகாய சூரர்களைப் போன்று நெஞ்சில் தைரியத்தை ஏற்றி மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெற்ற பிடிவீரர்கள் நின்று கொண்டு இருப்பார்கள். அந்த அணைப்பு மரத்தின் மேல் மேடையில் அமைத்து இருப்பர். அதில் போட்டியை நிர்வகிப்பவர்களும், களநிலவரத்தை வர்ணனை செய்பவர்களும் அங்கு அமர்ந்திருப்பார்கள். அவர்கள்  ஒவ்வொரு காளையின் பெயரைச் சொல்லச் சொல்ல காளைகளை அவிழ்த்துவிடுவார்கள்.
 
அதன்பின் சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க காளையர்கள் முயல்வார்கள். அப்போது திமிறிவரும் காளையில் திமிலை ஒரு கையிலும், அதன் வளைந்து கூராகவுள்ள கொம்பை மற்றொரு கையிலும் பிடிப்பதில்தான் வீரனது வீரமும் உயிரும் அடங்கியுள்ளது.
 
அந்த வாடிசாலில் குறிப்பிட்ட எல்லையை வரை காளையில்  திமிலையும் அதன் கொம்பையும் பிடித்துக் கொண்டு செல்லும் வீரன் காளையை அடக்கியவராகக் கருதப்படுவார்.அவருக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
 
ஒருவேளை காளையர்களால் காளையைப் பிடிக்கமுடியவில்லை எனில் அந்தக் காளை வெற்றிபெற்றதாகக் கருதப்பட்டு அந்த காளையின் உரிமையாளருக்குப் பரிசு வழங்க்கப்படும்.
 
இதில் ஆண்டுமுழுவதும் காளையை  தெய்வமாகப் பாவித்து வளர்த்து வந்தவர்களுக்கு வெற்றிப் பெருமிதமே ஏற்படும். வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அது அவர்களின் சொத்துதான். இவ்வருடம் தோற்றாலும் பெரும் செலவழித்து வளர்த்த காளையை அடுத்த வருடத்துக்கான போட்டிக்குத் தயார் செய்வார்கள்.
 
இதில், காளையர்களும் மகிழ்வர்கள், காளைகளுக்கும் காளைகளை வளர்க்கும் முதலாளிகளுக்கும் ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம் மனதில் ஏற்படும் இதுதான் தமிழர்களின் வெற்றிச் சரித்திர விளையாட்டின் சூத்திரம்.
 
இதில் விலங்கினத்தை வதைக்கிறார்கள் என்ற பேச்சுக்கே வழியில்லை.
 
இதில் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் மார்கழி மாதக் கடைசி நாளில் பழைய பொருட்களையும் தூரத்தில் எரிந்து; அடுத்து தை முதல் நாளில் அதிகாலையில் பூமிக்கு தண்ணீர் தெளித்து ; எறும்புகள் உண்ண பச்சரியில் அரைத்த  மாக்கோலமிட்டு; செவ்வந்தி சாமந்தி செந்தாமரைப் பூவினால் பூக்கோலம் இடுவர் இது இயற்கைக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துவதன் அறிகுறி. இந்தத் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வது அதற்காகத் தான்.
 
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலம்வரை ஒரு ராசியில் தங்கியிருக்கும். ஆனால் சூரியன் மட்டும்தான் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கின்ற போதும் ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு சென்று சஞ்சரிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அப்படி ஆறுமாதம் வரை ( ஆடி - மார்கழி )தட்சணாயனம் எனும் தென் திசையில் சுற்றிவந்த இந்தச் சூரியன் இந்த தை மாதத்தில் இருந்து சூரியன் உத்தராயணம் எனும் வடக்கு திசையை நோக்கிச் சஞ்சரிக்கும். அப்படி சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் சென்று குடியேறும்போது ஒரு தமிழ் மாதம் ஆனந்தமாகப் பிறக்கும்; இதில் மார்கழி மாதம் தனுசு ராசியில் சஞ்சரித்து வந்த சூரியன்  மகர ராசிக்குத் தாவுகின்ற போது நமக்குத் தைமாதம் பிறக்கிறது. இதைத்தான் மரக சங்கராந்தி என தெலுங்கிலும், மகாராட்டிய மாநிலத்திலும் கொண்டாடுகிறார்கள்.
 
மகாசங்கிராந்தி என்றால் நல்ல மாற்றம் என்று பொருளாகும். அதாவது மகரம் என்றால்  ராசி ; சங் - நல்ல ; கிராந்தி - மாற்றம் ; வருடத்தில் இருள் கவ்விய ஒரு மார்கழி ராசியில் ஒருந்து  சூரியன் இன்னொரு ராசிக்குள் நுழைந்து தை எனும் வெளிச்சம் அளிப்பதால் இனிவரும் காலம் ஆசீர்வாதமாக இருக்கும் என்ற அர்த்தத்தில் நம் முன்னோர்கள் இந்த பொன்னான நாளை அர்த்தமுள்ளதாகவும் அனுபவத்தால் உணர்ந்து தெளிந்து நமது உறவின் மேன்மையை ஓங்கச் செய்யும் விதமாகப் பொங்கல் தைத்திருநாள் என ஆரோக்கியம் முகமாகப்  படைத்தளித்திருக்கிறார்கள்.
 
இந்த மகர சங்கிராந்தியில் தான் வள்ளி தெய்வானையுடன் கையில் வீரவேல் கொண்டு காட்சியளுக்கும் தமிழ்க் கடவுள் முருகனுக்கு தைப்பூசத் திருவிழாவும்; அவரது அண்ணனும் சிவனுக்கும் - திருமால் மோகினி அவதாரதம் எடுத்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட புணர்ச்சி ஏற்பட்டதால் பிறந்ததாகக் கூறப்படும் சபரிமலை ஐப்பனுக்கும் இந்த நாளில்தான் பூஜைகள் செய்யப்படும். 
 
இதில் தான் நல்ல சுபநாட்கள் வந்து திருமணத்திற்கும் மற்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் தேதி குற்பார்கள். இனிவரும் நாள்களில் நல்ல மங்கலகரமானதாகவும் கருதப்படுகிறது.
 
அடுத்து வாசலில் மாக்கோலத்தில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கம் இன்றும் கிராமப் புறங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. அது, எதற்கென்றால் வெறும் பிள்ளையார் மட்டும் இருக்கிறதென்றல் திருமண வயதில் யாரும் இல்லை என்று பொருள். ஆனால் பிள்ளையாருடம் பூசணிப்பூ வைத்திருந்தால் அங்கு வீட்டில் வயதுக்கு வந்த பெண் உள்ளார். திருமணம் குறித்துப் பேசவரலாம் என்பதாகக் குறிப்பாக உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.
 
நிகழ்காலத்தில் பகிரியிலும் முகப்புத்தகத்திலும் ஒரு செய்திக்கு அடியில் நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல ; நீ தமிழன் என்றால் இதை ஷேர் செய் என்று சொல்வதன் அர்த்தம் இதுதான் ஆகும்