புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஜனவரி 2020 (09:17 IST)

அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு ! சீறி வரும் காளைகள் !! பாய்ந்து வரும் இளைஞர்கள் !!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கப்பட்டன.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். உலகையும் விவசாயத்தையும் காக்கும் சூரியக் கடவுளை வணங்கும் திருநாளன்று வீட்டில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம்.

இந்நாளின் மற்றொரு சிறப்பான நிகழ்வாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்காணிக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில்  700 காளைகள் மற்றும் 730 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.