புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 15 ஜனவரி 2020 (12:35 IST)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு தள்ளுபடி !

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவான அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும் கலெக்டர் அமைத்துள்ள கமிட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்; காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்டில் பலரின் சார்பில் வழக்குகள் தாக்குகள் செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமூகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில்  ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது. அதன்படி இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
 
மதுரை ஐகோர்டின் உத்தரவுக்கு எதிராக தென்கால் விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் சார்பில் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில், தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இது எங்கள் பாரம்பரிய உரிமை எனவும், மதுரை உயர் நீதிமன்றம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு  நடத்த அமைத்துள்ள பாரம்பரிய உரிமைக்கு எதிரானது; அதை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மனு இன்று சுப்ரீம் கோர்டில் தலைமை நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.