1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Aanadhakumar
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (16:39 IST)

துணை சபாநாயகர் தம்பிதுரை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தமிழகத்தில் குறிப்பாக மக்களவை துணை சபாநாயகரும், கரூர் எம்.பியுமான தம்பித்துரை வீட்டிலும், அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் மட்டும் ஏன் சோதனை நடத்த வில்லை என்று நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


 


தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகள் என 10 இடங்களில் சோதனை நடந்தது. மேலும் இந்த சோதனைக்கு முன்பே நத்தம் விஸ்வநாதன், அவரது ஆதரவாளர் கரூர் அன்புநாதன் என்று பல்வேறு இடங்களில் ரைடு நடந்ததது.

சேகர் ரெட்டி உள்ளிட்ட மணல் மாபியாக்கள் மற்றும் பல்வேறு அ.தி.மு.க பிரமுகர்கள் வீட்டிலும் தமிழக அளவில் ரைடு நடந்ததே தவிர மக்களவை துணை சபாநாயகரும், கரூர் எம்.பியுமான தம்பிதுரை வீட்டிலும், அவரது கல்வி நிறுவனங்களில் மட்டும் ரைடு நடத்தாது ஏன்? ஒரு வேலை அவர் மக்களவை துணை சபாநாயகர் என்பதினாலோ? என்று அ.தி.மு.க பிரமுகர்கள் மட்டுமில்லாமல், நடுநிலையாளர்களும், பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்களும் தங்களது கருத்து தெரிவித்துள்ளனர்.  
 
 -    சி.ஆனந்தகுமார்