காஷ்மீர் சிறுமி குறித்து பேசியதற்காக மாணவி சன்ஸ்பெண்ட்?
சமீபத்தில் ஆசிபா என்ற சிறுமி காஷ்மீரில் சில கயவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில் காஷ்மீர் சிறுமி குறித்து பேசியதற்காக கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின.
ஆனால் ப்ரியா, காஷ்மீர் சிறுமி குறித்து பேசியதற்காக சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்றும், ஆணாதிக்கம் என்ற தலைப்பில் அந்த மாணவி பேசியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானதாகவும், அதனால் அவரது பேச்சை தடுக்க முயன்றபோது பேராசிரியரிடம் அந்த மாணவி தவறாக நடந்து கொண்டதாகவும், அதற்காகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்