வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 மார்ச் 2018 (12:44 IST)

ஓவியாவுக்கு விருது கொடுத்த கமல் கட்சியின் பிரமுகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தமிழக இளைஞர்களின் லேடி சூப்பர்ஸ்டாராக மாறியவர் நடிகை ஓவியா. அவரது பெயரில் ஆர்மிகளும் படைகளும் டுவிட்டரில் ஆரம்பித்து டிரெண்ட் ஆக்கினர் அவரது ரசிகர்கள்

இந்த நிலையில் சென்ற ஆண்டின் சென்சேஷனல் ஹிட் மற்றும் ஆணவமில்லா ராணுவத் தலைவி என்பதற்காக அவருக்கு 'டார்லிங் ஆஃப் தமிழ்நாடு' என்'ற விருதை விகடன் குழுவின் 'அவள் விகடன்' பத்திரிகை வழங்கியுள்ளது. இந்த விருதை ஓவியாவுக்கு பழம்பெரும் நடிகையும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரமுகருமான ஸ்ரீப்ரியா வழங்கினார்

இந்த விருது கிடைத்தது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், அதிலும் ஸ்ரீப்ரியா கையால் பெற்றது எல்லையற்ற சந்தோஷத்தை கொடுத்ததாகவும் ஓவியா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.