வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (13:56 IST)

மக்களவையில் ஜெயித்த ஸ்டாலினால் சட்டமன்றத்தில் ஜெயிக்க முடியாதது ஏன்?

தமிழகத்தில் 37 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற முடிந்த திமுக தலைவர் ஸ்டாலினால் 22 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற முடியாதது ஏன் ? என்பது குறித்து அலசுவோம்
 
தமிழக மக்கள் எப்போதுமே பாஜகவுக்கு எதிரானவர்கள். அதனால் தான் கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடி அலையையும் மீறி அதிமுகவை 37 தொகுதிகளில் ஜெயிக்க வைத்தார்கள். இந்த தேர்தலிலும் அதிமுக தனித்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் இதுபோன்ற ஒரு தோல்வியை பெற்றிருக்க வாய்ப்பே இல்லை. 
 
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால்தான் அந்த கோபத்தில் மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே இதில் திமுக சந்தோஷம் அடைய ஒன்றுமே இல்லை. திமுகவை மக்கள் உண்மையில் ஆதரித்திருந்தால் சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்திருப்பார்கள். எனவே அதிமுக மீது மக்களுக்கு கோபம் இல்லை என்பதும், திமுகவை இன்னும் மக்கள் நம்பவில்லை என்பதும்தான் இந்த தேர்தல் முடிவின்மூலம் தெரிய வருகிறது.
 
வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால், அதிமுக தனித்து போட்டியிட்டால் நிச்சயம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பதே இந்த தேர்தல் முடிவில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் ஆகும்