1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2019 (17:43 IST)

குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் - அமைச்சர் விமர்சனம் !

அதிமுக கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களின் அறிமுகக் கூட்டம் இன்று, உசிலம்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தபட்ட பின்னரே அதில் உள்ள நன்மை தீமைகள் குறித்து தெரியவரும். இந்தக் குடியுரிமை சட்டம் குறித்து மக்களை திசை திருப்பி, குட்டையைக் குழப்பி  மீன் பிடிக்க ஸ்டாலின் நினைக்கிறார். அவரது கனவு பலிக்காது என தெரிவித்தார்.