1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 24 மே 2021 (14:16 IST)

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம்: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்!

சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சற்றுமுன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி குறித்து நடிகர் ஒய் ஜி மகேந்திரன்  விளக்கமளித்துள்ளார். பத்மா சேஷாத்திரி பள்ளியை நானும் எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை என்றும் நான் அந்த பள்ளியில் ஒரு டிரஸ்டி மட்டும்தான் என்றும் இந்த பள்ளியை எனது தம்பி மற்றும் தம்பியின் மனைவியும் தான் நடத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்
 
மேலும் இந்த புகாரை பார்த்ததுமே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பள்ளிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்றும் ஆசிரியர் உண்மையில் குற்றவாளி என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.