1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. madhumitha posting video again in instagram

இன்னும் திருந்தலயா?!. நகை கொள்ளை போன பின்பும் வீடியோ போட்ட மதுமிதா!..

madhmutha
நாகர்கோவிலில் தம்மத்து கோணம் என்கிற பகுதியில் உள்ள விஐபி கார்டனில் வசித்து வரும் மதுமிதா என்பவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிடம், யூடியூபிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக தன் வீட்டில் இருக்கும் பணம், நகை எல்லாவற்றையும் காட்டி அவர் வீடியோ வெளியிட்டு வந்தார்.

என் வீட்டில் இவ்வளவு பணம் இருக்கு பாருங்கள்.. நான் வைத்திருக்கும் நகைகளை பாருங்கள்.. என சொல்லி 500 ரூபாய் கட்டுகளை காட்டுவது, கடவுளுக்கு பணத்தை வாரி இறைத்து பூஜை செய்வது, குழந்தை மீது பண மழை பொழிவது என வீடியோக்களை  வெளியிட்டு வந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கணவருடன் வெளியே சென்ற போது அவர் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்து 118 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து, அந்த திருடர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்திருக்கிறார்கள்.

இதையடுத்து அந்த கொள்ளையர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இப்படி பணத்தையும், நகையையும் காட்டி வீடியோ போட்டு வெறுப்பேத்தினால் இதுதான் நடக்கும் என்று அவர்கள் சந்தோஷப்பட்டனர். இந்நிலையில், வீட்டில் நகை கொள்ளை போன பின்னரும்
மதுமிதா தற்போது மீண்டும் பணத்தை காட்டி வீடியோக்களை போட தொடங்கி விட்டார்.
நெட்டிசன்கள் திட்டுவார்கள் என்பதற்காக கமெண்ட் பாக்ஸை அவர் நீக்கிவிட்டார்.

About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வட மாநில ஆண்களை வேலைக்கு எடுக்கமாட்டோம்!.. பெங்களூர் நிறுவனம் அறிவிப்பு..