செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 20 ஜனவரி 2019 (20:23 IST)

'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்?

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க '2.0' படத்தில் நடித்த அக்சயகுமாரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த படத்தில் நடிக்க அக்சயகுமார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அந்த கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக்பச்சனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாலிவுட் திரையுலக வட்டாரங்களில் செய்தி கசிந்துள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இருப்பினும் இதுகுறித்த ஹேஷ்டேக் ஒன்று டுவிட்டரில் டிரெண்டிங் ஆகிவிட்டது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.