வெள்ளி, 27 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (18:34 IST)

குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையை விரட்டும் போது காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு .....

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் ஆகிய இரண்டு தாலுக்காக்களும் முதுமலை மற்றும் கேரளா மாநில வெழிமண்டல வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இங்கு காட்டு யானைகள்,புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் அறியவகை பறவையினங்களின் வாழ்விடமாக உள்ளது.
 
குறிப்பாக பந்தலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்பு மற்றும் சாலைகள்,தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் சேரம்பாடி அருகேயுள்ள சப்பந்தோடு குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று உலா வந்து குடியிருப்பு முன் பகுதியில் உள்ள பாக்கு மற்றும் வாழை  மரத்தை உடைத்துள்ளது.
 
அதிக சத்தம் வருவதை கேட்க குடியிருப்பு வாசியான குஞ்சு மொய்தீன் வீட்டிற்கு வெளியே சென்று காட்டு யானையை விரட்டி உள்ளார்.அப்போது காட்டு யானை குஞ்சு மொய்தீனை தாக்கி உள்ளது.இதில் குஞ்சு மொய்தீன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில்  சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
 
தற்போது குஞ்சு மொய்தீன் உடல் பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்,
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சேரம்பாடி சுங்கம் பகுதியில் பந்தலூர் கோழிக்கோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 200 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனால் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி, கோழிக்கோடு செல்லும் சாலையில் சுமார் 3மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.