ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (09:44 IST)

மீண்டும் சட்ட சிக்கலில் எடப்பாடி பழனிச்சாமி: பதவி இழக்கப்போகும் அந்த அமைச்சர் யார்?

மீண்டும் சட்ட சிக்கலில் எடப்பாடி பழனிச்சாமி: பதவி இழக்கப்போகும் அந்த அமைச்சர் யார்?

எடப்பாடி பழனிச்சாமி அரசு 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சட்டப்படி தவறு என கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த தகுதி நீக்கத்தால் ஒரு அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டிய காட்டாயத்தில் உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.


 
 
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 164 (1) (1) (a) -இன் படி மாநில சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடக் கூடாது. அமைச்சரவையில் உள்ள முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மிகாமல் இருக்க வேண்டும்.
 
தற்போது அமைச்சரவையில் முதல்வர் உட்பட 33 அமைச்சர்கள் உள்ளார்கள். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 233-இல் இருந்து 215-ஆக உள்ளது. எனவே 215 எம்எல்ஏக்களில் 15 சதவீதம் 32-ஆக உள்ளது. இதனால் தற்போது உள்ள அமைச்சரவையின் எண்ணிக்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளது.
 
ஆகவே தற்போது எந்த அமைச்சர் தனது பதவியை இழக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளது என திமுக கூட இன்று தனது வாதமாக நீதிமன்றத்தில் வைக்க வாய்ப்புள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த அமைச்சரை பதவியிலிருந்து தூக்க உள்ளது என்பதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.