புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (15:11 IST)

பாஜக மதவாத அரசியல் செய்கிறதா? விளக்கும் தமிழிசை

மதம் சார்ந்த அரசியல் செய்யும் நிலை பாஜகவிற்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜிஎஸ்டி யை எதிர்த்த பலர் தற்பொழுது அதனால் தமிழகத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதால், ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும் பாஜக மதவாத கட்சி என கூறும் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தபோது ஏராளமான ஊழல்களை செய்துள்ளனர். அப்போது தான் ஈழத்தில் தமிழர்கள் குவியல் குவியலாய் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனை ஏன் மத்தியில் இருந்த காங்கிரஸும், தமிழகத்தை ஆண்ட திமுகவும் கண்டுகொள்ளவில்லை.
 
21 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாஜக மதவாத அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.