வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (10:37 IST)

திமுகவில் அழகிரி? கனிமொழியின் பரபரப்பு விளக்கம்

அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்பது குறித்து கனிமொழி விளக்கமளித்துள்ளார்.
கட்சி கோட்பாடுகளை மீறியதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் மகனும் முன்னாள் அமைச்சருமான அழகிரி, கருணாநிதியின் மறைவிற்கு பின்னரும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் எனவும் அவர்கள் எனக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள் எனவும் கூறி வருகிறார் அழகிரி.
 
இந்நிலையில் செந்தில் பாலாஜி போன்று திமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் எல்லாம் மீண்டும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். மற்றவர்களையெல்லாம் கட்சியில் இணைத்துக்கொள்ளும் போது அண்ணன் அழகிரியை ஏன் கட்சியில் செர்ர்த்துக்கொள்ளவில்லை என திமுக எம்.பியும் அழகிரியின் சகோதரியுமான கனிமொழியிடம் கேட்கப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த அவர் யார்யாரைக் கட்சியில் சேர்க்க வேண்டும்,சேரக்கக் கூடாது என கட்சியின் மூத்த தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள் என பதிலளித்தார்.