வேலூர் தேர்தல்: கமல், தினகரன் விலகியதால் யாருக்கு லாபம்?
வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். மீதி அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த மக்களவை பொதுத் தேர்தலில் தனியாக களம் கண்ட தினகரனின் அமமுக மற்றும் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளனர்., இந்த நிலையில் மக்கள் நீதி மையம் தொண்டர்களின் வாக்குகளும் தினகரனின் அமமுக தொண்டர்களின் வாக்குகளும் யாருக்கு செல்லும் என்பது ஒரு கேள்வியாக எழுந்துள்ளது
தினகரன் கட்சியின் தொண்டர்கள் பெரும்பாலும் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்பதால் அந்த வாக்குகள் அனைத்துமே மீண்டும் அதிமுகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஒரு சில தீவிர தினகரன் ஆதரவாளர்கள் மட்டும் மாற்றுக் கட்சிக்கு வாக்குகள் அளித்தாலும் அதிமுகவுக்வே அதிக வாக்குகள் செல்லும் என தெரிகிறது
அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தொண்டர்களின் வாக்குகள் நிச்சயமாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் செல்ல வாய்ப்பே இல்லை. திமுக அதிமுகவை எதிர்த்து கமலஹாசன் அரசியல் செய்து வருவதால் அவருடைய தொண்டர்கள் கண்டிப்பாக இந்த இரண்டு கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். எனவே கமல் கட்சியின் தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க அதிக வாய்ப்புள்ளது
எனவே கமல், தினகரன் கட்சிகள் போட்டியிடாததால் திமுகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பது ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஆளுங்கட்சியின் அதிகார பலம், பண பலம் ஆகியவற்றோடு தினகரன் கட்சி தொண்டர்களின் வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைப்பதால் அதிமுகவின் வேட்பாளர் தற்போதைய நிலையில் முன்னிலையில் உள்ளார் என்று தான் கூறப்படுகிறது