1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (15:47 IST)

கையோட வேலூரையும் மூனா பிரிச்சிடுங்க: ராமதாஸ் டிவிட்டர் கோரிக்கை!

தமிழகத்தில் மிக அதிக சட்டப்பேரவைகளைக் கொண்ட வேலூர் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.  
 
இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்தார். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாக அறிவித்தார். 
 
இந்த அறிவிப்புகளின் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயந்துள்ளது. விரைவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணம் புதிய மாவட்டமாக்க அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் பிதிய மாவட்டங்களின் அறிவிப்பு குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டதாவது, புதிய மாவட்டங்களை உருவாக்க ஆணையிட்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி!
 
சிறிய மாவட்டங்கள்தான் மிகவும் அழகானவை. நிர்வாக வசதிக்கு ஏற்றவை. எனவே, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மிக அதிகமாக 13 சட்டப்பேரவைகளைக் கொண்டது வேலூர் மாவட்டம்தான். அந்த மாவட்டம் வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட வேண்டும். 
 
வேலூர் இடைத்தேர்தல் முடிவடைந்து நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தபின் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறேன். என தெரிவித்துள்ளார்.