புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 26 பிப்ரவரி 2025 (07:57 IST)

இன்றுடன் நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா.. தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் தூய்மை பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கானோர் புனித நீராடியுள்ளனர். தற்போது வந்துள்ள தகவலின்படி, இதுவரை 63 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ள நிலையில், இன்று நிறைவு நாள் என்பதால் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

 ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26ஆம் தேதி இன்று நிறைவு பெறுகிறது. மேலும், கும்பமேளா முடிவடைந்தவுடன் தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன், 2019 ஆம் ஆண்டு கும்பமேளா நிகழ்வின் போது 10 ஆயிரம் பேர் தூய்மை பணியில் பங்கேற்றிருந்தனர். ஆனால், இந்த முறை 5 ஆயிரம் பேர் அதிகமாக தூய்மை பணியில் ஈடுபட்டு, புதிய சாதனை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva