செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (12:33 IST)

புல்புல் பறவைகள் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை?? – சு.வெங்கடேசன் எம்.பி கலாய்!

Su Vengadesan
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாக ஜே.பி.நட்டா பேசியதை கிண்டல் செய்யும் விதமாக சு.வெங்கடேசன் எம்.பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் காரைக்குடியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் 95% முடிக்கப்பட்டுவிட்டதாக பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் முன்னதாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நட்டு சென்றார். அதன்பின்னர் இன்று வரை கட்டிட பணிகள் எதுவும் தொடங்காமல் இருப்பதால் விரைவில் கட்டிட பணிகளை தொடங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜே.பி.நட்டா பணிகள் முடிந்துவிட்டதாக பேசியது சர்ச்சையாகியுள்ளது.
AIIMS


இதுகுறித்து கிண்டல் செய்யும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதுரை எம்.பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் “பாஜக ஆட்சி! புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் எம்.பி மாணிக்கம் தாகூரும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்.” என்று பதிவிட்டுள்ளார்.