1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 டிசம்பர் 2018 (14:46 IST)

பேய்ட்டி புயல் எப்போது தாக்கும்? வெளியான அதிர்ச்சி தகவல்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாம். ஆம், வருகிற 10 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் மாறி தமிழகம் - ஆந்திரா கடற்கரையை நோக்கி புயல் நகரும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 
 
முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆந்திரா நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 
 
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி 12 ஆம் தேதி புயலாக மாறி கடற்கரை நோக்கி நகர துவங்கும். 14 ஆம் தேதி கரையை நெருங்குமாம், 15 ஆம் தேதி கடற்கரையை அடையும், 16 ஆம் தேதி கரையை கடக்காமல் வலுவிழந்து ஒடிசாவுக்கு சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, கணிப்பின்படி அனைத்தும் நடந்தால் திங்கட்கிழமைக்கு மேல் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.