வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (10:35 IST)

சசிகலாவுக்கு கட்டம் சரியில்லை: கழுத்தை நெரிக்கும் கிடுக்குபிடி விசாரணைகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை வரும் டிசம்பர் 13 ஆம் தேதி ஆஜர் படுத்தும்படி சென்னை எழும்பூர் நீதிமன்றம் பெங்களூரு சிறை துறைக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 
ஆம, ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து மின்னணு சாதனங்கள் வாங்கியதில் சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மீது அமலாக்க பிரிவினர், அந்நிய செலாவணி மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். 
 
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு பாஸ்கரன் மற்றும் சசிகலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இதையடுத்து, சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அவரை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
ஆனால், உடல்நல குறைவை காரணம் காட்டி சசிகலாவை சிறை துறையினர் ஆஜர்படுத்தவில்லை. தற்போது வரும் 13 ஆம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்றுதான் சசிகலாவிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் பெங்களூர் சிறைக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.