வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (08:19 IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திமுக உரிமை இல்லை: தமிழிசை

தமிழகத்தில் மூன்று இடங்களிலும், இந்தியா முழுவதும் 55 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. குறிப்பாக இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை -  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு எந்த வித உரிமையும் இல்லை என விமர்சித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு தமிழகத்தின் மீது அக்கறையுடன் செயல்படுவதாகவும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக கொண்டு வர மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.